களமும் நமதே!
இனிவரும் காலமும் நமதே!
புதியதோர் விதி ஒன்றை
புதுமையாய் நாம் செய்வோம்!
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்!
புதியதோர் விதி ஒன்றை
புதுமையாய் நாம் செய்வோம்!
நில்லாமல் போராடு
வெல்லும் வரை
புதியதோர் விதி ஒன்றை
புதுமையாய் நாம் செய்வோம்!
கொள்கை தலைவர்கள்
மதச்சார்பற்றசமூகநீதிக்கொள்கைகள்
சாதி, மத, மொழி, பாலின போன்ற எந்த விதமான பாகுபாடில்லாத இல்லாத அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க உருவாக்கப்பட்ட கொள்கைகளாகும்.
மக்கள் தலைவர்
தளபதி
விஜய்

கொள்கை விவரங்கள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (மக்கள் யாவரும் பிறப்பால் சமமே) சமநிலைச் சமூகம் படைத்தல்
பாரபட்சமற்ற மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தைச் சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோர்க்கும் எல்லாமுமான சமநிலைச் சமூகம் உருவாக்குவது.
ஒரு நாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்திச் சாத்தியப்படுத்துவது
ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படைச் சுதந்திர உரிமைகளைப் பறிக்கும் மாநில / ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது
இட ஒதுக்கீடு அல்ல... விகிதாச்சார இடப் பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழி வகுக்கும்
ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலக்கட்டம் வரை, அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்
சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளதாரம், வர்க்கம் மற்றும் பாலின சமத்துவதுடன் கூடிய உரிமை
எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே
மதச் சார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும் மதநம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி நிர்வாகம்
மாநிலத் தன்னாட்சி உரிமையே அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை
மாநிலத் தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்டல்
தாய் மொழி ஆகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை
தமிழே ஆட்சிமொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி
தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
அரசுத் துறை மற்றும் தனியார் துறை என்று எந்தத் துறையிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகம் அமையும்
மத, இன, மொழி, வர்க்க பேதமற்ற வகையில் கல்வி, சுகாதாரம், தூய காற்று, தூய குடிநீர் என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை வழங்கப்படும்
சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை
மனித குலத்தின் உடல், மன, குண நலனுக்குக் கேடாக அமையும் வகையில் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளை நிராகரிப்பது
பழைமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல் படி
சூழலியல் மற்றும் காலநிலை தொடர்பான நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய, இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதிசார் மாநில வளர்ச்சிப் பரவலாக்கம்
உற்பத்தித் திறன்/உடல் மற்றும் உள்ள நலன் கெடுக்கும், சமூகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத் தமிழகம் படைத்தல்
கட்சித் தலைவர்கள்

என் ஆனந்த்
பொது செயலாளர்

Dr. K.G. அருண்ராஜ்
கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்

ஆதவ் அர்ஜூனா
பொது செயலாளர் - தேர்தல் பிரச்சார மேலாண்மை

வெங்கட்
பொருளாளர்

தஹிரா
மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர்
அறிக்கைகள்
வலைப் பதிவுகள்
5 days ago

5 days ago

நிகழ்வுகள்
தோழர்களாய் ஒன்றிணைவோம்!
தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகம்
புதியதோர் விதி ஒன்றை
புதுமையாய் நாம் செய்வோம்!